திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், யாழ். அச்சுவேலியை வசிப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த மகாலிங்கம் செல்வகுமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று கடந்தாலும் ஆறாத துயரோடு
அணையாத தீபத்தைப்போல்
உங்கள் நினைவலைகள்
கலந்த நெஞ்சோடு வாழ்கின்றோம்
இன்னொரு ஜென்மம் இருந்தால்
அதிலும் நீங்களே எங்கள்
வீட்டின் ஆலமரமாகவும்
அதில் நாங்கள் விழுதுகளாகவும் வர
ஆண்டவனை வேண்டுகிறோம்
எம் உயிருக்கும் மேலானவரே
உம் நினைவோடு நீர் மறைந்து போனபின்பும்
உம் நினைவு சுமந்த நெஞ்சமெல்லாம்
கண்ணீராய் கரைந்து
பேராறாய்பெருகுதய்யா மடைதிறந்து!
உம் பாசப்பிணைப்பினால்
நாம் பலரும் தவிக்கின்றோம்
இல்லத்தின் சுடரொளியாய் வையத்தில்
வாழ்ந்த உங்கள் அன்புள்ள
ஆத்மாவின் சாந்திக்காய் வேண்டுகின்றோம்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!
அன்னாரின் ஆத்மா சாந்தி பிரார்த்தனை 20-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:30 மணிமுதல் பி.ப 16:30 மணிவரை Paroisse de Bellevaux / st luc Aloys Fauquez 21 Case Postale129, 1000 Lusanne18, Switzerland எனும் முகவரியில் நடைபெறவுள்ளது. அதனை தொடர்ந்து இந்த நிகழ்விலும் மதிய போசன விருந்திலும் கலந்து அன்னாரின் ஆத்ம சாந்தியை பிரார்த்திக்கும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.