யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், நீராவியடியை வதிவிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மகாலட்சுமி இராஜலிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஒரு பத்து ஆண்டின் முன்பாய்
எம்மோடு இருந்தால் அம்மா!
புருவத்தை உயர்த்தி நாங்கள்
புன்னகைத்து இருந்தோம்!
அன்பின் உருவத்தின் கையால் உண்டு
உவகை கொண்டோம்
எங்கள் பெரும் சொத்தைக் காலம்
பறித்துப் புலம்பிட வைத்த தேனோ?
லிங்கம்மா என்று வந்து
நீராவியடியில் கேட்டால்
எங்கம்மா என்று எவரும்
உரிமையாய் அழைக்கும் அம்மா!
தங்கம்மா போன்று லண்டன்
தேசமும்
வந்து வாழ்ந்த “லிங்கம்மா" மறைந்த தேனோ?
மறவாது நினைக்கத் தானோ?
உண்மையாய்ப் பழகி உன்போல்
உயிரினில் அன்பைச் சொரிய,
மென்மையாய்ப் பேசி
மற்றவர் மனமறிந்து உதவி புரிய,
நன்மையாய் நினைத்து
வாழ்வில்
நல்லதற் கெல்லாம்
உதவ முன்நின்ற
அன்னையைப் பிரிந்து
முடிந்ததோ பத்து ஆண்டு?
முன்பின் அறியா தோர்க்கும்
முகவரி நீதான்!
உண்மை
அன்பின் பெறுமதி
உரைத்த முழுமதி நீதான்!
மனிதப் பண்பின் இலக்கணம் நீதான்!
படைப்பின் மகத்துவம் நீதான்!
உன்பின்
நின்றவர்க் கெல்லாம்
உச்சம் கொடுத்தவள் நீயேதான் அம்மா!