யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், நீராவியடியை வதிவிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மகாலட்சுமி இராஜலிங்கம் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கா நினைவுகளுடன்
லிங்கம்மா..!!
கார்த்திகை மழையைப் போல
கருணை மழையே நீ தான்!!
காத்திடும் தெய்வம் போல
காத்தவள் எம்மை நீ தான்
வார்த்தையில் சொல்ல முடியா
வாழ்க்கை தந்தவள் நீ தான்!
பார்த்தவர் வியக்க வளர்த்தாய்
பார்க்க நீதான் இல்லை!!
நீராவியடியில் பாரு
நிமிர்ந்ததும் பெயரில் இல்லம்
பேரோடு வாழ்ந்த உந்தன்
புகழினை மறக்காது உள்ளம்
நீர் ஆவி ஆகும், உந்தன்
நினைவுகள் நீங்கிப் போகுமா?
பேர் காவித் திரியும் எங்கள்
பெருமையே நீ தான் அம்மா!!
ஊரெல்லாம் உன்னை மெச்ச
உத்தமி போல வாழ்ந்தாய்!
யாரெல்லாம் கேட்டால் அவர்கள்
யாவர்க்கும் உதவி செய்தாய்!
போர்க்கால இடரில் கூட
பிள்ளைபோல் பலரைக் காத்தாய்!!
நேற்றெமைக் காத்த தாயே,
நீயெங்கே விட்டுப் போனாய்?
கண்களை மூடித் திறக்க
கண்முண் நீ தான் அம்மா!
திங்களைப் போல ஒளிரும்
திருமுகம் நீயே அம்மா!
எங்களை வழி நடத்த
இருக்கின்ற ஒருத்தி அம்மா!
உங்களை மறந்து வாழ
எப்படி முடியும் அம்மா!
நியமாய் பிரிந்தாலும் நினைவில் பிரியாத
அம்மாவின் நினைவுகளுடன்
பிள்ளைகள்...!