Clicky

9ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 27 AUG 1934
இறப்பு 21 AUG 2014
அமரர் மகாலட்சுமி இராஜலிங்கம் (லிங்கம்மா)
வயது 79
அமரர் மகாலட்சுமி இராஜலிங்கம் 1934 - 2014 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

திதி: 11-09-2023

யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், நீராவியடியை வதிவிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மகாலட்சுமி இராஜலிங்கம் அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.

நீங்காது நீளும்லிங்கம்மா நினைவுகள்!
****************************

ஆண்டுகள் ஓடுது அன்னையே!
ஆனாலும் மறவோம் உன்னையே!
நீண்டிடும் காலப் பெருவெளியில்;
நீயோ தெரிகிறாய் எம்விழியில்!
மாண்டனை என்று மறப்போமா?
மறுபடியுன் வயிற்றில் பிறப்போமா?
ஆண்டவள் அன்பினால் எம்மை!
அவள்தான் தெய்வம் உண்மை!

கன்னக் குழிவிழும் சிரிப்பும்,
கருணையோடு இரங்கும் சிறப்பும்;
தன்னைப் போலவே மற்றவர்தம்மை
நினைக்கும் பண்பும்,

அன்னை " லிங்கம்மா"க் கிணையாய்
ஒருவரைக் காண்பது அரிது!
முன்னைத் தவம்போல் உதித்தாய்!
முத்தியும் பெற்றாள் எம்தாய்!
தெய்வ அம்சமாய்த் தெரிவாய்!
தெய்வத் தொண்டும் புரிவாய்!
சைவப் பழம்போல் திரிவாய்!
சகலகலா வள்ளி எம்தாய்!
செய்த புண்ணியப் பலனால்
பிள்ளைகள் வாழ்கிறோம் நலமாய்!

உய்ய வைத்தவள் நீதான் உயிரோடு
இல்லையே அம்மா?
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

தகவல்: குடும்பத்தினர்