யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், நீராவியடியை வதிவிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மகாலட்சுமி இராஜலிங்கம் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீளும் காலங்கள் தோறும்
நீ வாழ்வாய் அம்மா!
நீராவி யடியில் லிங்கம்மா!
நின்நாமம் மறவார் யாரும்
ஊரோடு ஒன்றி வாழ்ந்த
உன்சிறப்பை மெச்சும் ஊரும்
நீரடித்து நீரென்றும் விலகாது
அதுபோல உன்னன்பும் பிசகாதம்மா
பேரிலங்க வாழ்ந்த எம்தாயின்
பெருவாழ் விற்குநிகர் ஏதம்மா.
பிள்ளைகள் சிறக்கவும் வைத்தாய்
பேரரை வியக்கவும் வைத்தாய்
இல்லையே என்பார்க் கெல்லாம்
இருப்பதைப் பகிர்ந்தே கொடுத்தாய்
நல்லதைச் செய்தே வாழ்ந்தாய்
நற்தவப் பேறும் பெற்றாய்
செல்வதி போன்றே வாழ்ந்து
சென்றவள் உனைமறப் போமா?
மனம்போல் 'இராஜ லிங்கம்
மகா லஷ்சுமி இல்லம்" உங்கள்
நினைவினைச் சொல்லி அழகாய்
நிமிர்ந்ததே அம்மா! எங்கள்
கனவிதை அமைத்தே உமக்கு
காணிக்கை செய்தோம் நாளும்
அனைவரும் இதனைப் பார்த்து
பூரிக்கச் செய்தோம் உமக்காய்!
காலங்கள் நீளும் போதும்
கனவிலும் நினைவிலும் நீங்கள்
ஆழமாய் நெஞ்சில் வாழும்
அன்புப் பொக்கிஷம் நீங்கள்
வாழும் காலம் முழுதும்
உங்களை வாழ்த்தி வாழ்வோம்
நீளும் உங்கள் நினைவில்
நித்தமும் உம்மைக் காண்போம்..