யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், நீராவியடியை வதிவிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மகாலட்சுமி இராஜலிங்கம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
நினைவுகள் ஆறாது
இற்றை வரையிலும் ஒற்றை உறவுனக்கு
இணையாய் யாருமில்லை - எம்மை
பெற்றவள் போலொரு பேறுடை
தெய்வம் புவியினில் ஏதுமில்லை
உற்றவர் மற்றவர் உறவுகள் சொந்தம்
உதட்டினில் தருமன்பை - எம்மை
பெற்றவள் மட்டுமே பிள்ளைகட்
காயெனத்தருவாள் தன்தெம்பைதாயிலும்
மேலாய்த் தெய்வம் உண்டெனத்
தெய்வமும் சொன்னதில்லை - பெற்றதாய்
தரும் அன்பினைப் போலொரு அன்பினை
யாரும் தந்ததில்லை
ஆயிரம் கோடி மெத்தையில் உறங்கினும்
தாய்மடிக்கு ஈடாமோ- எம்மை
சீயென்று யாரும் சினக்காமல்
வாழ வைத்தவள் தாய்தானே,
சொன்ன சொற்படி எம்மை வளர்த்தசொர்க்கத்
தங்கமம்மா - அம்மா
உன்னை எப்படி நாங்கள் மறப்பது எம்முயிரே
எங்கம்மாவண்ண வாழ்வினை வாழ வைத்தது
நீ வளர்த்த வளர்ப்பம்மா- இந்த
மண்ணில் உந்தனை இழந்து போனது
பெரிய இழப்பம்மா
நீராவி யடியில் இப்போதும் உந்தன்
நினைவுகள் வாழுதம்மா - அம்மா
பேர் கூறும் போதே லிங்கம்மா என்றே
உறவுகள் கூறுதம்மாசீரோடு வாழ்ந்து நீ
சேர்த்த செல்வம் நல்ல பெயர் தானம்மா - உந்தன்
பேர் சொல்லி வாழும் பிள்ளைகள் மனதில் உன் நினைவே தேனம்மா....