யாழ். கன்னாதிட்டி பெருமாள் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி நடராஜா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
குடும்பத்தின் குலவிளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எம் குள விளக்கே!
வாழ்நாள் முழுவதும் உங்களை
நினைக்கும் போதெல்லாம்
உங்கள் நினைவுத் துளிகள் விழிகளின்
ஓரம் கண்ணீராய் கரைகின்றதம்மா..!!
உங்களையே உலகமென உறுதியாய் நாமிருக்க
ஏன் விண்ணுலகம் நிரந்தரமாய் விரைந்தீரோ?
நீங்கள் எமை விட்டுச் சென்றாலும்
ஆறவில்லை மனது
ஆண்டுகள் பல கோடி சென்றாலும்
ஆறாது ஆறாது நம் நினைவுகள்...!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
ஓம் சாந்தி..! ஓம் சாந்தி..! ஓம் சாந்தி..!!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இங்ஙனம்,
பிள்ளைகள்:- உமாதேவி, சிவக்குமார், உதயகுமாரி, வத்சலகுமாரி, சாந்தகுமாரி.
மருமக்கள்:- விஜயாதேவி, சண்முகராஜா, மோகனதாஸ்.
பேரப்பிள்ளைகள்:- விஜிதா அஜித், டனிதா பிரசன்னாத், திலக் நிரூபினி, கீர்த்தனா பிரசாந்தன், கார்த்திகா ஆதித்தன், சிந்துஜன், தர்ஷிகா.
பூட்டப்பிள்ளைகள்:- றயான், ஷாணிகா, வைஷ்னவி, விஷ்ணு, ரித்யா, நெலியா, ஷிவேஷ்.
சகோதரர்கள்:- சிவபாக்கியம், பழனிச்சாமி.
Despite the loss of the physical presence,we know that God has assigned this soul to watch over you throughout your life. We feel for your loss, our most sincere condolences.