1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
9
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். கன்னாதிட்டி பெருமாள் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த மகேஸ்வரி நடராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 13-01-2023
பத்துமாதம் மடிசுமந்து
பக்குவமாய் பெற்றெடுத்து
பாலோடு பாசத்தையும் ஊட்டி
கண்களைப் போல் எமைக்காத்து
கண்ணியமாய் வாழவைத்த அன்புத்தாயே!
கண்ணில் அழுகை ஓயவில்லை
நெஞ்சம் உன்னை மறக்கவில்லை
நேசம்
என்றும் நிலைத்திருக்க
பாசத்தை தந்து பறித்தெடுத்தவளே!
எம்மை எல்லாம் அன்பாலும்
பண்பாலும்
அரவணைத்து
எம்மை வழிநடத்திய
அந்த நாட்கள்
எம் நினைவலைகளில்
என்றும் சுழல்கிறதே அம்மா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
மகேஸ்வரி பாட்டியுடன் பழகிய நாட்கள் என்றென்றும் மறக்க முடியாதவை. ஒவ்வொரு தடவையும் அவரை மொன்றியல் இல்லத்தில் சந்தித்ததும், அவருடன் பேசிய நினைவுகளும் இன்றும் என் கண்முன் நிற்கின்றன....