யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவியை வசிப்பிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த குட்டிப்பிள்ளை தர்மலிங்கம் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஏழு கடந்தாலும் ஆறிடுமோ
உங்கள் நினைவலைகள் அப்பா!
கண்ணின் மணி போல் எம்மைக் காத்த
அன்புத் தெய்வமே ஆறிடுமோ எங்கள் துயரம்
எண்ண முடியவில்லை ஏழு ஆண்டுகள்
எப்படித்தான் சென்றதுவோ?
பக்கத்தில் நாமிருக்க
துக்கத்தில் எமை ஆழ்த்தி
தூரதேசம் சென்றதெங்கே?
பாசமழை பொழிந்து
நேசமாய் எமை வளர்த்து
துணிவுடனே நாம் வாழ
வழியதனைக் காட்டிவிட்டு
எமைவிட்டு சென்றதெங்கே?
இல்லறத்தின் இலக்கணமாய்
இலங்கிய எம் இல்லத் தலைமகனே
ஏழேழு ஜென்மம் உமை மறவோம் நாமே...
நீங்கள் எங்களைவிட்டு நீண்டதூரம் சென்றாலும்
உங்கள் ஆசைமுகம் எம் நெஞ்சில் நிலைத்திருக்கும்
உங்களோடு வாழ்ந்த நாட்கள் திரும்பி வராதா
என்று எண்ணித் துடிக்கிறோம் அப்பா.
நீங்கள் இல்லாத இந்த உலகத்திலே
சுவாசிக்க கூட வலிக்கிறதே!
மீண்டும் ஒரு பிறவி எடுப்பின்
உங்கள் பிள்ளைகளாய் பிறந்திடவே வரம் கேட்போம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
My beloved uncle, We are always thinking about you. You were my Mother's favorite brother-in-laws. You had respect and kindness for each other. My mani auntie and cousins loved you and will...