Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 19 APR 1934
மறைவு 15 SEP 2021
அமரர் குமாரசாமி ஆறுமுகம் 1934 - 2021 நெடுந்தீவு மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திதி:13/09/2024

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto, வவுனியா பூந்தோட்டம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குமாரசாமி ஆறுமுகம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி. 

அன்பின் சிகரமே வாழ்வின்
ஒளிவிளக்கே எம் குடும்பத்தலைவனே!
எம் வாழ்வின் வழிகாட்டிய தீபமே!

ஆண்டு மூன்று மறைந்து
விட்ட போதிலும்
அன்பின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
எம்மோடு பயணித்த
எங்கள் அன்புத்தெய்வமே!

நாம் மகிழ்ச்சியாக இருக்க
நம்மிடம் ஆயிரம் விடியல்கள்
இருந்தாலும் சோகத்தை பகிர
ஒரு நல்ல துணையாக
இறைவன் நமக்களித்த வரமாக
நீங்கள் இருந்தீர்கள்!

உங்கள் குரல் எங்கள் காதுகளில்
இப்போதும் கணீரென்று கேட்குதப்பா!
ஆண்டுகள் கடந்தாலும் உங்கள்
புன்முறுவல் பூப்பூத்தவதனமாய்
இருந்துகொண்டே இருக்கும்..!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!

அன்னாரின் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலிக்கு நெடுந்தீவு மேற்கு முதலாம் வட்டாரத்தில் 13-09-2024 வெள்ளிக்கிழமை அன்று மதிய போசன நிகழ்வு நடைபெற உள்ளது. அனைவரும் கலந்துக் கொள்ளுமாறு என்பதை அன்புடன் அழைக்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Thu, 16 Sep, 2021
நன்றி நவிலல் Wed, 13 Oct, 2021