திதி: 26-06-2021
யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பரந்தன், யாழ்ப்பாணம் கன்னாதிட்டி வீதி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கிருஸ்ணர் இராஜரட்ணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நாட்கள் வாரங்களாய் நகர்ந்து
மாதங்கள் விரைந்தோடி
ஆண்டொன்றை தொட்டதுவோ
இன்னமும் நின் முகம்
தெரிகிறதே தெள்ளத் தெளிவாக
திரும்பும் இடமெல்லாம்...
ஆசையாய் அப்பா என்று
அழைத்துப் பார்க்கிறோம்
அங்கே நீங்கள் இல்லை....
நிஜத்தை நாம் அறிவோம்
ஆனாலும் உணர எம் இதயம் மறுக்கிறதே....
ஏற்றம் இறக்கம் அனைத்தும் கண்ட
உங்களின் வாழ்க்கைப் பயணம்,
நேர்த்தியான பார்வை, தளர்வறியா மன உறுதி,
பகிர்ந்து கொண்ட அனுபவங்கள்,
கற்றுத்தந்த பாடங்கள் அனைத்தும்
எங்களை தொடர்ந்தும் வழிநடத்தும்.
நாமும் உங்களின்
பசுமையான நினைவுகளை
சுமந்து பயணிக்கிறோம்...
அன்புடன் மனைவி, பிள்ளைகள்,
மருமக்கள் மற்றும் பேரப்பிள்ளைகள்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகிறோம்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
நான் பிறந்த வீடும் அமரர் பிறந்த வீடும் 200 யார் இடைவெளியில் - மகாஜனா கல்லூரிக்கு அருகில், பாவலர் துரையப்பப்பிள்ளை வீதிக்கு அருகில். வந்து சிறு வயதில் அடிக்கடி காண்பேன். நீண்ட காலமாயினும் நினைவுகள்...