யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பரந்தன், யாழ்ப்பாணம் கன்னாதிட்டி வீதி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கிருஸ்ணர் இராஜரட்ணம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
எம் இனிய அன்பான அப்பாவிற்கு....
இல்லம் எனும் கோயிலின் தெய்வமாய்
அன்பு எனும் பள்ளியின் ஆசானாய்
அயராது உழைத்து வையகத்தில் எம்மை
வளமாக வாழவைத்து அன்புடன்
அறிவுரைகள் பல கூறி எம்மை நல்வழி
நடாத்தி எங்கள் நெஞ்சத்தில் நிறைந்து
விட்ட அன்புத் தெய்வமே,
நாட்கள் முப்பத்தொன்று கழிந்து போயின
முப்பத்தொன்றென்ன முப்பொழுதும் எப்பொழுதும்
எங்கள் உயிர் உள்ளவரை உங்கள் நினைவுகள்
எம் நெஞ்சை விட்டு நீங்காது
உங்களின் ஆத்மா சாந்தி பெற தங்களின் இஷ்ட தெய்வமாம்
குமரவேள் அம்மனை வேண்டி வழிபடுகின்றோம்.
மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
எம் குடும்ப ஒளிவிளக்கின் இறுதிச் சடங்கிலும், அந்தியேட்டிக் கிரியையிலும் கலந்துகொண்டு சிறப்பித்தோர்க்கும் மற்றும் பல்வேறு வகைகளில் உதவிகள் புரிந்து, ஆறுதலையும், அனுதாபத்தையும் நல்கிய உற்றார், உறவினர்கள், அயலவர்கள், நண்பர்கள், காளி அம்பாள் கோவில் நிர்வாகிகள் மற்றும் தங்களது அன்னாரின் நினைவலைகளை பகிர்ந்தோர்கள் அனைவருக்கும் எமது உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
நான் பிறந்த வீடும் அமரர் பிறந்த வீடும் 200 யார் இடைவெளியில் - மகாஜனா கல்லூரிக்கு அருகில், பாவலர் துரையப்பப்பிள்ளை வீதிக்கு அருகில். வந்து சிறு வயதில் அடிக்கடி காண்பேன். நீண்ட காலமாயினும் நினைவுகள்...