Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 10 MAY 1942
இறப்பு 26 OCT 2020
அமரர் கிருஸ்ணபிள்ளை அருணகிரிராஜா
ஒய்வு பெற்ற வர்த்தக முகாமையாளர் உடுப்பிட்டி ப.நோ.கூ.சங்கம்
வயது 78
அமரர் கிருஸ்ணபிள்ளை அருணகிரிராஜா 1942 - 2020 வல்வெட்டித்துறை கம்பர்மலை, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். கம்பர்மலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த கிருஸ்ணபிள்ளை அருணகிரிராஜா அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.  
தசமி திதி: 11-11-2024

அப்பாவே அன்பானவரே
அழைக்கின்றோம் நாங்கள் இன்று
அணைத்திட வருவாயோ
அழுகையுடன் காத்திருக்கின்றோம்
நாம் இங்கு!

இன்றும் உங்கள் பிரிவால்
எம் இதயம் கலங்குகின்றது!
எம் குடும்ப குல விளக்கு அணைந்ததை
எண்ணி மெழுகாய் உருகுகின்றோம்...!

உங்களை உருக்கி எமக்காக உயிர்
உள்ளவரை வாழ்ந்தீர்கள் எங்களை நினைத்து
எங்களுக்காய் இவ்வுலகில் எல்லாம் செய்தீர்கள்!

அல்லும் பகலும் ஓயாது உழைத்ததனால்
அமைதியில் ஓய்வெடுக்க இறைவனடி சென்றீரோ

காலத்தின் சக்கரங்கள் கடுகதியில் சென்றாலும்
கடந்து வந்த பாதையிலே நினைவலைகள் தொடரட்டும்

என்றும் உங்கள் ஆன்மா சாந்தி பெற
இறைவனை வேண்டிப் பிரார்த்திக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos