Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 10 MAY 1942
இறப்பு 26 OCT 2020
அமரர் கிருஸ்ணபிள்ளை அருணகிரிராஜா
ஒய்வு பெற்ற வர்த்தக முகாமையாளர் உடுப்பிட்டி ப.நோ.கூ.சங்கம்
வயது 78
அமரர் கிருஸ்ணபிள்ளை அருணகிரிராஜா 1942 - 2020 வல்வெட்டித்துறை கம்பர்மலை, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். கம்பர்மலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த கிருஸ்ணபிள்ளை அருணகிரிராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

நினைவுகளைச் சுமந்து நீந்திக்
கரை சேரத் துடிக்கிறோம்
கனவுகளை கண்டு கண்ணீரால்
நனைந்த நாட்கள் நினைக்கிறோம்

மறக்க முடியவில்லை அப்பா...
மாசற்ற மாணிக்கமாய்
மாற்றுக் குறையாத் தங்கமாய்
எங்கள் குடும்பத்தில் கொழசவிருந்து
அரசாண்ட மன்னவரே!

சுமைகளை நீங்கள் சுமந்து
இமைகளாய் எமை காத்தீர்கள்

ஆண்டுகள் ஆனதென்ன
ஆறாது எம் துயரம்

நிழல் போலத் தொடர்ந்து வந்த அன்பே!
உணர்வோடு கலந்த உயிர்மூச்சை
உள்ளடக்கி கண்ணீரை காணிக்கையாக்குகிறோம்..

26-10-2020 திங்கட்கிழமை அன்று சிவபதமடைந்த எமது குடும்பத்தலைவர் அமரர் கிருஸ்ணபிள்ளை அருணகிரிராசா அவர்களின் சிவபதப்பேறு குறித்த முதலாம் ஆண்டு ஆத்ம சாந்தி திவசக் கிரியைகள் எதிர்வரும் 13-11-2021 சனிக்கிழமை பகல் 11.00 மணியளவில் எமது இல்லத்தில் நடைபெறவிருப்பதால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகைதந்து அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos