யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி கரணவாய் மேற்கு நாற்றம் தோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தசாமிப்பிள்ளை இராசரத்தினம் அவர்களின் 18ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 19-11-2025
எம் அருமை ஐயாவே
எம்மைவிட்டு எங்கு சென்றீரோ ...
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து பதினெட்டு ஆண்டு ஆனாலும்
ஆறாது உங்கள் பிரிவுத்துயர் ஐயா...
ஆண்டவன் படைப்பினை
ஆழமாய் பார்த்தாலும்!
பாசமாய் உங்களின்
பண்பினை நினைகின்றோம்!
நேசமாய் உங்களின்
புன்னகையை ரசிக்கின்றோம்!
எம்மை எல்லாம் அன்பாலும்
பண்பாலும் அரவணைத்து
எம்மை வழிநடத்திய அந்த நாட்கள்
எம் நினைவலைகளில் என்றும்
சுழல்கிறதே
ஐயா...
காவல் தெய்வமாய் எங்களோடு
என்றும் நீங்கள் இருப்பதாய் எண்ணி
உங்கள் நினைவுகளோடு
வாழ்ந்து கொண்டிருக்கும்....
எங்கள் அன்பு ஐயாவே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,
பூட்டப்பிள்ளைகள்
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!
ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலிகள்!