யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி கரணவாய் மேற்கு நாற்றம் தோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தசாமிப்பிள்ளை இராசரத்தினம் அவர்களின் 16ம் ஆண்டுகள் நினைவஞ்சலி.
திதி: 12-12-2023
அன்புத் தெய்வமே
எங்கள் ஆருயிர் ஐயாவே
அன்போடும் பண்போடும்
அயாரமல் காத்தவரே
16 ஆண்டுகள் ஆனதுவோ
ஐயா நீங்கள் இன்றி ஆறாத் துயரில்
நாம் அனுதினமும் தவிக்கின்றோம்.
ஆயிரம் உறவுகள் அருகில் இருந்தாலும்
ஐயா உங்கள் அன்புக்கு அது ஈடாகுமா
எல்லாம் இருந்தென்ன எம்மோடு
நீங்கள் இன்றி
இதயம் கனக்கிறது
எழுதிய விதி எண்ணி நேற்றுப்போல்
எல்லாமே நெஞ்சுக்குள் நிக்குதய்யா
நித்தம் உம்மைநினைத்து சித்தமும் துடிக்குதய்யா
காலங்கள் விடைபெறலாம் ஆனாலும்
கண்முன்னே நீங்கள் வாழ்ந்த நினைவுகள்
ஒருபோதும் அகலாது
வலிகள் சுமந்து
விழிகள் நனைந்து
வாழும் நாள் முழுக்க
உங்கள் நினைவுடன் வாழும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,
பூட்டப்பிள்ளைள்
ஓம் சாந்தி..! ஓம் சாந்தி....! ஓம் சாந்தி...!
ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலிகள்!