Clicky

நினைவஞ்சலி
பிறப்பு 08 AUG 1932
இறப்பு 09 DEC 2007
அமரர் கந்தசாமிப்பிள்ளை இராசரத்தினம்
ஓய்வுபெற்ற ஊழியர்- வல்வெட்டித்துறை ஊறணி வைத்தியசாலை
வயது 75
அமரர் கந்தசாமிப்பிள்ளை இராசரத்தினம் 1932 - 2007 அச்சுவேலி பத்தமேனி, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி கரணவாய் மேற்கு சோளங்கனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தசாமிப்பிள்ளை இராசரத்தினம் அவர்களின் 13ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்னையாய் அரவணைத்து
தந்தையாக தாங்கி நின்று
அனைத்துமாக தனித்திருந்து
எமை ஆளாக்கி அழகு பார்த்தீர்

எண்ணி எண்ணி பார்க்கின்றோம் இன்றும்
ஏங்கி நிற்கின்றோம் எம் அன்பு ஐயாவே!!

அன்பையும் பண்பையும்
பாசத்தையும் நேசத்தையும் கற்பித்து
வாழ்ந்து காட்டிய எம்
அன்புத் தெய்வமே ஐயாவே!!

ஆண்டுகள் பதிமூன்றென்ன எம்
உயிர் மூச்சு உள்ளவரை
என்றென்றும் உணர்வுடன்
கலந்திருக்கும் உங்கள்
அன்பும் நினைவுகளும்...

அன்பு பெருக அணைத்த கரங்களும்
நாம் ஆழ்ந்து உறங்கிய பாச மடியும்
இன்பம் தரும் தங்கள் இனியசொற்களும்
இன்றியே நாங்கள் இயல்பிழந்தோம் ஐயாவே!!

பதிமூன்று வருடங்கள் உருண்ட போதிலும்
உங்களின் நினைவுகள் மனதில் ஓயாத அலைகளாய்
ஒவ்வொரு நாளும் ஏதோ ஓரிடத்தில் உங்களின் ஞாபகம்
ஐயா மீண்டும் வரமாட்டாரா என ஏங்குவோம் நாங்கள்!

உங்களின் மீதான எங்களின் தேடல்கள்
எங்கள் உயிர் மூச்சு உள்ளவரை ஓயாது!!!     

உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
பிரிவால் வாடும் பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.....

தகவல்: குமார்(மகன்)