யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி கரணவாய் மேற்கு சோளங்கனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தசாமிப்பிள்ளை இராசரத்தினம் அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 23-11-2022
“ஐயா என்றழைக்க
உள்ளம் துடிக்குதய்யா”
நீங்கள் எமக்களித்த இன்பமெல்லாம்
நினைத்து முடிக்கு முன்பே
நிர்மூலமான தென்ன?
எல்லா நினைவுகளும் நீங்களாகி
உங்கள் உயிர் உள்ளவரை வாழ்ந்தோம்
இப்போ ஆறாத ரணங்களுடன் ஆயிரம்
இரவுகள் அழுதாலும் பிரிவின் துயர் குறையவில்லை
உம் அன்பு முகம் மறக்க முடியவில்லை தெய்வமே...
ஒரு மலராய் மலர்ந்து
பலர் வாழ மணம் வீசிய தெய்வமே
என்றும் அழியாத உம் பாசம்
எம்மை விட்டு அகலாது ஐயா
மறைந்தது வெள்ளி அல்ல
இன்னொன்று வாங்கி ஈடுசெய்ய
தங்கம் தொலைந்தால் பதில் ஒன்று வாங்கி விடலாம்
வைரம் மறைந்தால் வைடூரியத்தை தேடி விடலாம்
பவளம் தொலைந்தால் முத்துக்
குளித்து விடலாம்
மாறீடு செய்ய முடியாத மாசற்ற எம் செல்வமே!
மண்ணோடு மறையும் காலம் வரை எம்
நெஞ்சோடு இருக்கும் உங்கள் நினைவுகளுடன்
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்.
ஓம்சாந்தி! ஓம்சாந்தி!! ஓம்சாந்தி!!!
என்றும் வானளவும் மறவாத
நினைவுகளுடன் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்...
ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலிகள்!