Clicky

நினைவஞ்சலி
பிறப்பு 08 AUG 1932
இறப்பு 09 DEC 2007
அமரர் கந்தசாமிப்பிள்ளை இராசரத்தினம்
ஓய்வுபெற்ற ஊழியர்- வல்வெட்டித்துறை ஊறணி வைத்தியசாலை
வயது 75
அமரர் கந்தசாமிப்பிள்ளை இராசரத்தினம் 1932 - 2007 அச்சுவேலி பத்தமேனி, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி கரணவாய் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தசாமிப்பிள்ளை இராசரத்தினம் அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி
அன்பின் சொரூபமாய் வலம் வந்து
பார்போற்ற பட்டணத்தின் கரணவாயில்
செங்கதிரோன் போல் ஒளி வீசிய எம் ஐயா!


இல்லற வாழ்வுதனை நல்லறமாக்கி
தம் பெருமை காத்து தலை சிறந்த நம் தெய்வமே
பல்லுயிரும் பெற்றுப் பல வாழ்வும் கண்டு
வாழையடி வாழையாக வளம் பெற்று வாழ
ஒளி வீசும் விண்மீனாய் என்றும் ஒளி பரப்பி


கண்ணின் இமைபோல காக்கும் தெய்வமே
இப்புவியில் எமைவிட்டுப் பிரிந்து
துணையின்றி விண்ணுலகில் ஒளிர்ந்த தாரகை
இன்று தம் தாரத்துடன் சொர்க்கத்தில்

பதினொராம் ஆண்டு நினைவினை
தம்பதியினராய் வானுலகில் வலம் வந்து
தாம்பெற்ற செல்வங்கள் தரணி தனிலே
துன்ப துயரற்று பார்போற்ற இனிது வாழ
தங்களின் ஆசீர்வாதங்களை அள்ளித் தந்த எம் ஐயாவே!


உங்களின் ஆத்மா சாந்தியடைய
என்றென்றும் இறைவனைப் பிரார்த்தித்து நிற்கும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்

தகவல்: மகன்(லண்டன்)