யாழ். கொடிகாமம் மந்துவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், மீசாலை வடக்கு கோயிலாமனையை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சின்னத்துரை அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.
அன்னாரின் அந்தியேட்டி கிரியை 11-11-2021 வியாழக்கிழமை அன்று பி.ப 06:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையில் நடைபெறும் வீட்டுக்கிருத்தியக்கிரியை 12-11-2021 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 11:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெறும் அத்தருணம் தாங்களும் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், கிரியைகளிலும் அதனைத் தொடர்ந்து நடை பெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
அத்துடன் எமது தந்தையின் பிரிவுத் துயரில் பல்வேறு வகையிலும் எமக்கு உதவி புரிந்த உற்றார், உறவினர், நண்பர்கள், அயலவர்கள் மற்றும் நேரிலும் தொலைபேசி மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் அனுதாபங்கள் தெரிவித்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
He was a classmate of mine at Veerasingham Mahavithyalayam. He was a very kind and friendly person. May his soul rest in peace. - Thiraviyanathan