![](https://cdn.lankasririp.com/memorial/notice/209706/c8c81a62-bc2d-4c26-9a5c-4d216402fb4d/23-64e14d582ed64.webp)
யாழ். கொடிகாமம் மந்துவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், மீசாலை வடக்கு கோயிலாமனையை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சின்னத்துரை அவர்கள் 13-10-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வராணி(ஆசிரியை- மீசாலை வீரசிங்கம் ஆரம்ப வித்தியாலயம்) அவர்களின் பாசமிகு கணவரும்,
சோபிதன்(ஆசிரியர்- கிளி/ புன்னை நீராவி அ.த.க பாடசாலை), சோபிதா(முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்- கமநல அபிவிருத்தித் திணைக்களம், கிளிநொச்சி), சோபிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, காசிப்பிள்ளை, இளையதம்பி மற்றும் தங்கம்மா, கனகம்மா, இராசையா(ஜேர்மனி), கிட்டிணபிள்ளை(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சரஸ்வதி, இராசம்மா, வைத்திலிங்கம், லோகநாதன், தயாதேவி, அருட்செல்வி, கமலம்மா, பரமசாமி, செல்வமலர், காலஞ்சென்ற தங்கவடிவேல் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-10-2021 வியாழக்கிழமை அன்று மீசாலை வடக்கு கோயிலாமனையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் சோனகன்புலவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
He was a classmate of mine at Veerasingham Mahavithyalayam. He was a very kind and friendly person. May his soul rest in peace. - Thiraviyanathan