Clicky

7ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 29 MAR 1949
இறப்பு 09 OCT 2019
அமரர் கந்தையா புவனேஸ்வரி 1949 - 2019 புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பெருமாள் கோவிலடி யாழ்பாடி வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா புவனேஸ்வரி அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.


எங்கள் உயிரில் கலந்த தாயே!
எமைவிட்டு பிரிந்து ஆண்டுகள் ஏழு
ஓடி மறைந்ததம்மா...

நித்தம் எங்கள் கண்களுக்குள்
நிறைந்திருக்கும் எங்கள் அன்புத் தாயே
நினைவெல்லாம் உங்களைச்
சுமந்தல்லோ நிற்கின்றோம்

நிலவை சூரியனை ஒளிர்கின்ற
தாரகைகளை பார்க்கையிலே
அங்கே அம்மா உங்கள் முகம்தானே
பட்டொளியாய் தெரிகிறது

ஆண்டுகள் பல சென்றாலும் - எம்
மனதில் பசுமையாக
துளிர் விட்டுக் கொண்டேயிருக்கும்

எம் தாயே உம் பிரிவால் - மீளமுடியாமல்
நீரில்லா மீனைப் போல் துடிக்கிறோம் -தாயே!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
என்றும் பிரார்த்திக்கின்றோம் தாயே

தகவல்: குடும்பத்தினர்