Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 29 MAR 1949
இறப்பு 09 OCT 2019
அமரர் கந்தையா புவனேஸ்வரி 1949 - 2019 புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பெருமாள் கோவிலடி யாழ்பாடி வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா புவனேஸ்வரி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.  

உள்ளமுருகி எமை உயிரோடு
அரவணைத்த பண்புமிகு தெய்வமே!
பாசத்தின் உறைவிடமே
உங்களைப் பார்ப்பது இனி எக்காலம்?

காலங்கள் மாறினாலும்
கனவுகள் சென்றாலும் உங்கள் கோலமுகமும்
உதட்டோரப் புன்னகையும் என்றும் மாறாது!

தெய்வத்துள் நீங்கள் நிறைந்து விட்டாலும்
வையத்துள் வாழும் நாங்கள் நித்தமும்
நினைத்தே வாழ்வோம்!

அன்பின் திருவுருவாய் எமது வழிகாட்டியாய்
எமது இதயங்களில் அணையாத சுடராய்
என்றும் இருப்பீர்கள் அம்மா! 

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்