Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 30 MAY 1962
இறைவன் அடியில் 29 SEP 2021
அமரர் கணபதிப்பிள்ளை சுகுணராஜா
வயது 59
அமரர் கணபதிப்பிள்ளை சுகுணராஜா 1962 - 2021 வளலாய், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அச்சுவேலி வளலாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், முல்லைத்தீவு விசுவமடுவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை சுகுணராஜா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.  

திதி: 03-10-2026

 பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
 வாழ்ந்த எம் குல விளக்கே!

வாழ்நாள் முழுவதும் உங்களை
நினைக்கும் போதெல்லாம்
உங்கள் நினைவுத் துளிகள்
விழிகளின் ஓரம் கண்ணீராய் கரைகின்றதப்பா..!!

ஆசைத்தம்பி சுகுணா சொந்த பந்தம் புடைசுழ
இனிய வார்த்தை பல சொல்லி கலகலப்பாய் பேசி
எல்லோரையும் சிரிக்க வைப்பாய் 
அந்த சுகுணன் இப்போ எங்கே போய்விட்டாய்

உற்றார் உறவினர்கள் ஏங்குகிறார்கள் உன்னை காணாமல்
ஊட்டி வளர்த்த உடன் பிறப்பாம் சின்னக்கா
உள்ளம் சோர்வடைந்து எங்கெல்லாம் - உன்னைத் தேடி
அலைகின்றேன் தம்பி சுகுணா - மீண்டும். பிறப்பு ஒன்று
இருந்தால் எங்களிடம் வந்திடுவாய்

பெத்தவர்கள் தங்களுக்கு உதவிக்கு ஆளில்லை என்று
கூப்பிட்டவுடன் நானும் சீக்கிரம் வருகிறேன் என்று
உடன் பிறப்புகளை தவிக்க விட்டு அம்மாவிடம் சென்றாயோ ஐயா
காலங்கள் பல ஓடி மறைந்தாலும் உன் நினைவுகள்
எப்போதும் என் கண் முன்னே நிழல் போல் தோன்றும் தம்பி
எம் உயிர் உள்ளவரை உன் நினைவில் வாழ்ந்து
கொண்டு இருக்கும் சின்னக்காவின் ஐந்தாம் ஆண்டு
நினைவு அஞ்சலி 

ஐந்து ஆண்டு எமைப்பிரிந்து சென்றதனை
ஒரு பொழுதும் எம் மனது ஏற்றதில்லை
உள்ளத்தில் பல கனவு ஒன்றாக நாமும் கண்டோம்
 கனவெல்லாம் நனவாகும் காலம் வருமுன்னே
 கண்மூடி மறைவாய் என்று கனவிலும் நினைக்கவில்லை!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: சின்னக்கா- அருந்தா ஸ்ரீகாந்தா

Photos

Notices