திதி: 24-09-2024
யாழ். அச்சுவேலி வளலாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், முல்லைத்தீவு விசுவமடுவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை சுகுணராஜா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
வரமென என் வாழ்வில் வந்த தவமே
காலன் உன்னைக் காவுகொண்டு
ஆண்டு மூன்று ஆனதுவோ
நம்ப முடியவில்லை
நெஞ்சுருக்கும் செய்தியொன்று- நாம்
நொடிப் பொழுதில் அறிந்தோம் தம்பி..
இடியென வந்த செய்தி - எம்
இதயத்தை சுட்டதது தம்பி...
காலனவன் வென்றானென்று
கண்ணிமைக்கும் பொழுதினிலே
காற்றினிலே கலந்தாய் தம்பி
இன்று குலவிளக்கு அணைந்ததென்று
ஊற்றெடுக்கும் விழிநீரால் - எம்
உதிரங்களே கண்ணீரால் வெதும்புது தம்பி..
நிழல் போன்று எங்கும் தொடர்ந்தாய்
நினைவை தந்து ஏன் சென்றாய்..?
கனவாய் தொலைந்தது ஆண்டு மூன்று
கரையுது இன்னும் விழியிரண்டு
உன்னோடான நினைவுகள் சுமையாய்
கணக்கின்றன மனதினிலே...
வலியோடு தவிக்கின்றோம் - புவிமீதில்
உன் நினைவோடு எந்நாளும்..."
கடந்துவிட்ட வருடங்களில் கலங்காத
நாட்களில்லை நீ இருக்கும் போது
ஆனந்தக் கண்ணீர் தந்த விழிகள்
இப்பொழுது தூக்கம் தொலைத்து
கண்ணீர் வடிக்குதையா
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்…