
யாழ். அச்சுவேலி வளலாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், முல்லைத்தீவு விசுவமடுவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை சுகுணராஜா அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஒளி தரும் சூரியனாக இருள்
அகற்றும் நிலவாக ஊர் போற்றும்
நல்லவனாக பார் போற்றும்
வல்லவனாக வாழ்வாங்கு வாழ்ந்து-
எங்களை வாழ வைத்த தெய்வமே
உங்கள் ஒழுக்கம் நற்பண்பு
மதிப்புகள் யாவும் எங்கள் வாழ்வில்
என்றென்றும் வழிகாட்டியாக இருக்கும்!
ஆண்டு 4 கடந்த பின் உம் நினைவை நாடி
ஈரவிழிகளுடன் உன் வதனம் தேடி
தீராத வேதனையை மனதில் பூட்டி
மாறாத நினைவுகளில் வாழ்கின்றோம்!
இளமையில் உயிர் பிரிந்தாய்
இதயத்தில் உறைந்து நின்றாய்
நீ இல்லா இவ்வுலகு எமக்கு வெற்றிடமே!
எழுதிச்செல்லும் விதியின் கையில்
சிக்கித் தவிக்கும் மானிடர் நாம்
அழுது புலம்பித் தொழுதாலும்!
சிந்தை நொந்து புரண்டாலும்
விதியின் மதியில் மாற்றமில்லை!
நீயில்லை இங்கே நாமில்லை உன்னருகே
இதுதான் விதியா? இல்லை கடவுளின் சதியா?
கொடிய காலனுக்கு மண்ணுலகில் இருக்க பிடிக்கவில்லை
கண் இமைக்கும் நேரத்தில் கண்ணையும் மூடினாய்
உன்னுடைய மூச்சும் நின்றது தம்பி- சுகுணா
நீர் இல்லாத இடத்தை நிரப்ப முடியாமல்
கண்ணீரில் மூழ்கி கண்கலங்கி நிற்கிறேன்
தம்பி சுகுணா
சின்னக்கா என்று என் தோல்மீது சுமந்தேன்
ஆண்டுகள் இத்தனை உருண்ட பின்பும்
இன்னும் நம்ப முடியவில்லை
நீங்கள் எம்முடன் இல்லை எனும் உண்மையை!!
என்றும் உங்கள் ஆத்மா சாந்தி பெற
இறைவனை வேண்டி நிற்கின்றோம்..