யாழ். அச்சுவேலி வளலாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், முல்லைத்தீவு விசுவமடுவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சுகுணராஜா அவர்களின் நன்றி நவிலல்.
எனது சகோதரன் சுகுணராஜா கிளிநொச்சி அரசினர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது சகல வைத்திய வசதிகளையும் வழங்கிய வைத்தியர்கள், தாதிமார்கள் உதவியாளர்கள் ஆகியோருக்கும்,
அவர் பூரண சுகமடைய வேண்டி பிரார்த்தனை செய்த அனைத்து உள்ளங்களுக்கும், அவர் இறைபதம் அடைந்த செய்தி அறிந்து எம் இல்லம் வந்து நேரில் ஆறுதல் கூறியும், லண்டன், அவுஸ்திரேலியா, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் இருந்து தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு ஆறுதலும் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும் எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும்,
இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு மலர்வளையம், மலர்மாலைகள் அணிவித்து Cut- OUt, பதாதைகள் கண்ணீர் அஞ்சலி பிரசுரங்கள் ஒட்டியவர்களுக்கும் அவர் தனிய இருந்த போது அவருடன் பழகிய நாட்களையும், அவரது கனவுகளையும் துயரங்களையும் எங்களோடு பகிர்ந்தவர்களுக்கும் எங்களது மனப்பூர்வமாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
கணபதிப்பிள்ளை சுகுணராஜாவின் 31ம் நினைவு அவரது விசுவமடு இல்லத்தில் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் மதியாபோசனமும் ந.ப 12:00 மணியளவில் நடைபெறும், உற்றார், உறவினர், நண்பர்கள் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்படுகிறோம்.
ஆயிரம் சொந்தங்கள் அணைத்திட இருந்தாலும்
உங்களைப் போல் அன்பு காட்ட யாரும் இல்லையே - இன்று
முப்பத்தி ஒரு நாட்கள் ஓடி மறைந்தாலும் - என்றும்
உங்கள் நினைவுகள் எம்மனதில் நிறைந்திருக்கும் - சுகுணா
என் அன்பு சகோதரனே ஆசைதம்பி சுகுணா
எல்லோருக்கும் உதவிக்கரம் நீட்டும்
என் மூன்றெழுத்து முத்தே தம்பி சுகுணா
நாங்கள் ஒன்பது பேரும் ஒரு கூட்டில் வளர்ந்தோம் - ஆனால்
நாங்கள் இன்று சிறகொடிந்த பறவையானோம் - தம்பி
நீ மட்டும் எங்களை தவிக்க விட்டு போனாயோ - தம்பி
கொரோனா என்னும் கொடிய நோய் உனது உயிரை பறித்து
விட்டதே - கண்ணா
என்ன செய்வது என்று தெரியாமல் பதறி துடிக்கிறோம் - கண்ணா
தப்ப முடியா மரணம் ஆறிலும் வரும் பதினாறிலும் வரும்
அறுபதிலும் வரும்
ஆனால் உமக்கு மட்டும் பாதி வயதில் வந்து விட்டது - சுகுணா
எப்படி மனம் ஆறுமடா சுகுணா
என் கருணை
உள்ள கொண்ட தம்பி சுகுணா
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!