யாழ். அச்சுவேலி வளலாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், முல்லைத்தீவு விசுவமடுவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை சுகுணராஜா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 06-10-2023
இன்றும் மீளாத்துயரத்தில் நாங்கள் எல்லோரும்
இருக்கையிலே இரண்டாவது ஆண்டும் ஓடியது
உங்கள் அன்பு முகம் காணாத கண்கள் தேடுகின்றன!
நீங்கள் எமக்கு ஊட்டியவைகள் எல்லாம்
நித்தம் நினைவில் வந்து வந்து
எம்மை நெறிப்படுத்தி செல்கின்றன
நிதானமுடன் அவ்வழியே பயணிக்கின்றோம்!
இரண்டு ஆண்டுகள் கடந்தாலும் உனது நினைவுகளுடன்
தீராத வேதனையுடன் மாறாத நினைவுகளுடன்
ஒன்பது பேரோடு கூடிப்பிறந்தாய் தம்பி
சந்தோஷமாய் கூடி வாழ்ந்தாய் தம்பி
நாட்டுப் பிரச்சனையால் இடம் விட்டு
இடம் மாறி பிரிந்து சென்றோம்- தம்பி சுகுணா
சுதந்திரப் பறவையாய் உற்றார் உறவினர்
நண்பர்களோடு அச்சுவேலி வளலாய் விசுமடு
என்று
வலம் வந்த ஆருயிர் தம்பி
எங்கள் தவிக்கவிட்டு சீக்கிரம் விண்ணுலகம்
போவாய் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை- தம்பி சுகுணா
கொறனோ என்ற கொடிய நோயால் பாதிக்கப்பட்டாய்
கடைசி உயிர் இருக்கும் வரை- உம்மை
காப்பாற்ற போராடினோம்.
கொடிய காலனுக்கு மண்ணுலகில் இருக்க பிடிக்கவில்லை
கண் இமைக்கும் நேரத்தில் கண்ணையும் மூடினாய்
உன்னுடைய மூச்சும் நின்றது தம்பி- சுகுணா
நீர் இல்லாத இடத்தை நிரப்ப முடியாமல்
கண்ணீரில் மூழ்கி கண்கலங்கி நிற்கிறேன்
தம்பி சுகுணா
சின்னக்கா என்று என் தோல்மீது சுமந்தேன்
ஆண்டுகள் இத்தனை உருண்ட பின்பும்
இன்னும் நம்ப முடியவில்லை
நீங்கள் எம்முடன் இல்லை எனும் உண்மையை!!
என்றும் உங்கள் ஆத்மா சாந்தி பெற
இறைவனை வேண்டி நிற்கின்றோம்..