Clicky

பிறப்பு 20 MAR 1972
இறப்பு 31 AUG 2023
அமரர் கனகரட்ணம் செல்வரட்ணம் (செல்வம்)
வயது 51
அமரர் கனகரட்ணம் செல்வரட்ணம் 1972 - 2023 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

இந்திரன் நண்பர்கள் குழு 01 SEP 2024 United Kingdom

ஆண்டொன்று ஆனதோ அன்பு நண்பா செல்வா நீ பிரிந்து காலன் உனை அழைத்தது கனவென்று நாம் இருக்க காலம் உணர்த்துகின்றது ஆண்டொன்று ஆகிவிட்டது என்று நண்பர்கள் விழாவென்றால் குடல்கறியும் பன்றிப்பிரட்டலும் நீ கொண்டு வருவாய் அதனால் இன்றும் எம் நண்பர்கள் மத்தியில் பேசும் பொருளாய் நினைவில் நிற்க்கிறாய் விதி உன்னை விரைவில் அழைக்கும் என்று உன் மறைவுச்செய்தி வரும்வரை நாம் நினைக்கவில்லை ஆனால் இன்று ஆண்டொன்று ஆகிவிட்டது அன்பு நண்பா நீ மறைந்து உடல் அழிந்துவிட்டது நண்பா ஆனால் உன் நினைவுகள் பசுமரத்தாணிபோல் எம் நெஞ்சில் ஆழப்பதிந்துவிட்டது ஆண்டுகள் பலகடந்தாலும் அழியாது நண்பா உன் பாச நினைவுகள் உன் ஆன்ம சாந்திபெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டிநிற்க்கின்றோம்

Tributes