2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கனகரட்ணம் செல்வரட்ணம்
(செல்வம்)
வயது 51
அமரர் கனகரட்ணம் செல்வரட்ணம்
1972 -
2023
புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
13
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம் சங்கத்தா கேணியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Sudbury ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கனகரட்ணம் செல்வரட்ணம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
என்றும் இல்லாத நிசப்தம்
ஏனோ இன்று எம்முள்..!
நான்கு சுவர்களுக்குள்
நாளிகையும் அதுவாய் கழிகிறது !
ஆண்டுகள் ஆனது இரண்டு
ஆறவில்லை என் மனம்..
நேற்றுப் போல் எல்லாம்
என் நெஞ்சோடு நினைவிருக்க
காற்றுப் போல் கண்களுக்கு
தோன்றாமல் நிற்கின்றான்
தோற்றுப் போனது என்
எதிர்பார்ப்பு எல்லாம் தான்!
கண்ணீரில் நீந்துகிறோம் என்
நினைவுகள் அனைத்தும் உன்
நினைவுகளாக அலை மோதுவதால்..
ஏங்கி நிற்கும் என் நிலை அறிந்து
எமை தாங்கி பிடித்து இன்நிலை
போக்க என் அடுத்த பிறவியிலும் நீயே
என் கணவராக வேண்டுமென
இரக்கமற்ற இறைவனிடம் மண்டியிட்டு
வேண்டுகிறோம்!
உன் நினைவுகளோடு!
தகவல்:
குடும்பத்தினர்
ஆண்டொன்று ஆனதோ அன்பு நண்பா செல்வா நீ பிரிந்து காலன் உனை அழைத்தது கனவென்று நாம் இருக்க காலம் உணர்த்துகின்றது ஆண்டொன்று ஆகிவிட்டது என்று நண்பர்கள் விழாவென்றால் குடல்கறியும் பன்றிப்பிரட்டலும் நீ...