Clicky

6ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 02 SEP 1973
இறப்பு 03 SEP 2020
அமரர் இலங்கைக்கோன் பல்லவநம்பி
வயது 47
அமரர் இலங்கைக்கோன் பல்லவநம்பி 1973 - 2020 வல்வெட்டித்துறை தீருவில், Sri Lanka Sri Lanka
Tribute 19 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

திதி: 29-08-2026

யாழ். வல்வெட்டித்துறை தீருவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்டிருந்த இலங்கைக்கோன் பல்லவநம்பி அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி. 


ஆண்டு ஆறு ஆனாலும்- ஆறாது
உங்கள் பிரிவின் துயரம்
தீராது எங்கள் சோகம்
உங்கள் இழப்பை எண்ணியெண்ணி
இதயம் வரைக்கும் இறங்கிய சோகத்தால்
இன்றும் எங்கள் விழிகளில்
வழிகின்றதே கண்ணீர்த்துளிகள்...

கரம்பிடித்த நாள் முதல் இறுதிவரை
இணைபிரியா வாழ்வதனை வாழ்ந்தோம்
யார் கண் பட்டதுவோ யான் அறியேன்
சிரித்துப்பேசி எனை விட்டுச் சென்றதேனோ..?
இருந்த இடம் தேடி தினம் புலம்புகின்றேன்

எங்களை நிர்க்கதியாய் பரிதவிக்க விட்டு
எங்கு சென்றீர்கள் காலங்கள் ஆயிரம்
போனாலும் மறக்க முடியுமா
 உங்கள் நினைவுகளை!

அப்பா என்று அழைக்க நீங்கள் இல்லையே
அடி மனதில் வலி துடிக்க  உயிரோடு வாழ்கிறோம்
எங்கள் உயிர் உள்ளவரை எங்கள் நினைவுகளில்
கலந்தே இருக்கும் உங்கள் நினைவுகள் அப்பா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: மனைவி, பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர்