யாழ். வல்வெட்டித்துறை தீருவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்டிருந்த இலங்கைக்கோன் பல்லவநம்பி அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
கரம்பிடித்தவளோடு வாழ்வில் பாதியாய் பக்கபலமாய்
இருக்காது பாதியிலே பரிதவிக்க விட்டு மறைந்துபோன
காரணம் தான் என்ன ?
என் வாழ்நாள் முழுவதும் கூடவே இருப்பேன்
என்று கூறியது பொய்யாகிப் போனதே- இன்று
தனிக்க விட்டு சென்று விட்டீரே!
என் அன்புக் கணவரே!
கண்பட்டுக் கலைந்து போனது
எமது வாழ்வின் நிஜங்கள்
காணாமல் உமை மறைத்து
விதி செய்த சதிகள்!!
அன்பான அப்பா உங்கள் முகம் காண
ஏங்கித் துடிக்கின்றோம் -எங்களை
வழிநடத்தி
அறிவூட்டவேண்டிய நீங்கள்
பாதியில் விட்டுச் சென்றதேன்!
சிரித்து வாழ்ந்த காலமெல்லாம்
சிறகடித்துப் பறந்தது
உங்கள் சிரித்த முகம்
எப்போது
காண்போம் அப்பா...
கண்ணை மூடி நாங்கள் தூங்க
கனவில் உங்கள் முகம் தெரிகிறதே- அப்பா
பாசம் காட்டும் உங்கள் முகத்தை
நாம் யாரிடமும் இன்னும் அறியலையே.....
நீங்கள் எங்களை விட்டு பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!
என்றும் உங்கள் நினைவுடன் வாழும்
மனைவி, பிள்ளைகள்