Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 02 SEP 1973
இறப்பு 03 SEP 2020
அமரர் இலங்கைக்கோன் பல்லவநம்பி
வயது 47
அமரர் இலங்கைக்கோன் பல்லவநம்பி 1973 - 2020 வல்வெட்டித்துறை தீருவில், Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வல்வெட்டித்துறை தீருவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்டிருந்த இலங்கைக்கோன் பல்லவநம்பி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.    

திதி:01/09/2023.

ஆண்டுகள் மூன்றாயினும் ஆறாது எம் துயரங்கள்
வலிகளை சுமந்து தனிமையிலே அழுகின்றோம்!
 நினைவுகள் வருகையில் நிலைகுலைந்து நிற்கின்றோம்!! 

ஆவாரம் பூப்போல அழகான சிரிப்பழகை
தேவாரப் பாடல் போல் இனிப்பான பேச்சழகை
 ஆதாரமாய் அனைவருக்கும் அச்சாணியென இருந்த உறவே
விண்ணுலகம் விரைந்து மூன்றாண்டு போனதுவோ?

அன்பிற்கு பணிவாய் பண்புக்கு பொருளாய்
 நட்பிற்கு இலக்கணமாய் திகழ்ந்தாயே!
 கண்ணுக்கு கண்ணாய் இருந்த நீரோ
காற்றில் கரைத்து கனவாகி போனதேன்...? 

உதிரத்திலும் உயிரிலும் கலந்த - உன்
 உடன்பிறப்புக்களை தவிக்க விட்டதேனோ?
எம் வாழ்வில் ஒளி தந்த நீங்கள் - நொடிப்பொழுதில்
 வானவில்லாய் மறைந்ததேனோ...?

நிலையில்லாத இவ்வுலகில் நிஜமாக வாழ்ந்த வாழ்வு
இன்று கானல் நீரானதேனோ...?
 வவாழ்க்கை என்னும் பயணத்தை பாதி வழி கடந்து
செல்வதற்குள் காலக்கொடியவன் கண்வைத்து உன்னுயிரை
 வேளை வருமுன் பறித்து வருடமோ மூன்றாகிவிட்டது

அதன் வலியோ எமக்கு ஆயுள்வரை தொடர்கிறது .....

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நினைவஞ்சலி Thu, 10 Sep, 2020
நன்றி நவிலல் Fri, 02 Oct, 2020