5ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
40
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
நோர்வே Oslo வை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த டெனுஜன் யோகதாஸ் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஐந்து ஆண்டுகள் கடக்கிறது ஆனால்,
ஐந்து நாட்கள் போல் தெரிகிறது உம் நினைவு!
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் - உங்கள்
உறவுக்கு நிகரில்லை யாருமே!
உரிமைகொள்ள ஆயிரம்
உறவுகள் இருந்தாலும் உள்ளத்தை புரிந்து
கொள்ள உம்மைப் போல் எவரும்
இல்லை எம் அருகினில்..
நீ இல்லாத உலகம் இருள் சூழ்ந்த
முழு வெறுமையை அன்றி வேறெதையும்
தந்து போகாது
ஆண்டுகள் எத்தனை போனாலும்
நீ எம்மோடு பேசிய கதைகள்
நம் நெஞ்சை விட்டு அகன்று போகாது
உன் நினைவுகள் தரும் கண்ணீர்
இவ்வுலகில் நாம் வாழும் வரைவற்றிப் போகாது
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்