நோர்வே Oslo வை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த டெனுஜன் யோகதாஸ் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புச் செல்வமே டெனுஜன் ...
எங்களோடு நீண்ட நெடுநாட்கள்
வாழ்வாய் என்றும் எங்களுக்கு
ஆறுதலாய் இருப்பாய் என்றிருந்தோம்!
அத்தனையும் நீ கனவாக்கி
எங்கு சென்றாய் செல்லமே!
கண்மூடி விழிப்பதற்குள் கணப்பொழுதில்
நடந்தவைகள் நிஜம் தானா என்று
நினைக்கும் முன்னே மறைந்தது ஏனோ?
நான் பார்க்கும் திசையெல்லாம்
உன் உருவே தெரிகிறது செல்லமே!!
நிஜத்திலே வந்துவிட்டால்
நிம்மதியாய் நாம் இருப்போம்
வாராது சென்றதனால் தீராது சோகமம்மா!!!
நீ இல்லா வெறுமை உலகத்தில்
உன் நினைவுகளுடன் எம் பயணம்
நாளும் தொடர்கிறது உன் வரவை எதிர்பார்த்து..!
உன் பிரிவால் துயருறும் அம்மா, அப்பா, சகோதரர் திவாகர் ..!
அன்னாரின் ஆத்ம சாந்தி பிரார்த்தனை 22-12-2021 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து மதிய போசன நிகழ்வு நடைபெறும்.
மதிய போசனம் நடைபெறும் முகவரி:
Jacobine Ryes vei 11a,
0987 Oslo,
Norway.