3ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
40
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
நோர்வே Oslo வை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த டெனுஜன் யோகதாஸ் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
மீண்டும் நீ வருவாயா டெனுஜன்!
கருவாகி உருவாகி சிசுவாகி
கனவையும் புயலையும் கவலையும்
கலைத்திட்ட எம் உயிருடன் கலந்த டெனுஜன்!
கனவாகிவிட்டதே எம் நினைவெல்லாம்!
அன்பும் பண்பும் அறிவும் நிறைந்தவனே!
எத்தனை உறவுகள் எமக்கிருந்தாலும்
அத்தனையும் உமைப்போல் ஆகுமா!
இப்பாரினிலே எம்மைப் பிரிந்து
மூன்றாண்டு ஆனதையா!
பாவியர் உள்ளம் உருகுதையா உன் நினைவுகளில்
பூத்துக் குலுங்கும் பூக்களின் புன்னகையில் உன்
குதூகலப் பேச்சை குழந்தைச் சிரிப்பை தொலைத்து
ஆண்டுகள் மூன்று ஆனதையா
பாரினில் உன் நிஜத்தை காணமுடியவில்லை!
உந்தன் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்