
யாழ். சண்டிலிப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bondy ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பாஸ்கரன் சயாஜினி அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஏழு போனாலும்!
அழியாது நம் துயரம் மறையாது
உங்கள் நினைவு ராஜி!!
எம்மை ஆறாத் துயரத்தில்
விட்டு போனதேனோ!
புன்னகை
புரியும் உங்கள் முகம்
எமக்கு
தினமும் தெரிகிறது ஆனாலும்
அது உண்மை இல்லை என்று
நினைத்தபின்
எம் மனம் கலங்குகிறது...
கண்முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும் எம்முன்னே
உங்கள் முகம் எந்நாளும்
உயிர் வாழும் ராஜி!!
இரவும் பகலும் உங்கள் முகம்
இதயம் வலிக்கிறது...
மறுபடியும் உங்களைப் பார்க்க
மாட்டோமா
என ஏங்கித்
தவிக்கிறோம் ராஜி!!...
ஓயாது உங்கள் நினைவு வந்து
வந்து
எதிர்கொள்ள ஒவ்வொரு
கணமும்
துடிதுடிக்க
உயிரோடு வாழ்கின்றோம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!