யாழ். சண்டிலிப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bondy ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பாஸ்கரன் சயாஜினி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
மூன்றாண்டுகள் என்ன? மூவாயிரம்
ஆண்டுகள் சென்றாலும் ஆறாது எம்
துயரம் தாயே! ஓடோடி வந்து எங்கள்
துயர் துடைக்க மாட்டீரோ?
உழைத்துக் களைத்து உங்கள் கடமைகளை
எல்லாம் சரிவரச் செய்துவிட்டு நிம்மதியாகக்
கடைசி காலத்தில் கனவுலகில் வாழ
வேண்டுமென்று இருந்த வேளையில் காலன் அவன்
உங்கள் கனவுகளைக் கலைத்து விட்டானே தாயே...
யாருக்கு யார் ஆறுதல் சொல்வது
யார் யாரைத் தேற்றுவது என்று
தெரியாமல் கலங்கி நின்று
இன்று ஆண்டுகள் மூன்றாகி விட்டது...
உங்கள் அழகு வதனம் காணாமல்
எங்கேயாவது உமது அழகு
வதனம் போல் தெரிகின்றதா எனத்
தேடுகின்றோம் காணவில்லையே...
காலத்தின் மடியில் துயிர் கொள்ளும்
உங்களை வருடம் ஒருமுறையாவது கூடி
உங்கள் நினைவில் நாங்கள் நனைகின்றோம்
எங்கள் மத்தியில் நீங்களும்
வந்து உறவாடுவீர்கள் என்ற
நம்பிக்கை வீணாகமாட்டாது
வாருங்கள்! வாழ்த்துங்கள்! ஆசீர்வதியுங்கள்!
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
உங்கள் குடும்பம் செழித்து வாழ
வழிகாட்டி உங்கள் வம்சம் விளங்க
வரலாறு படைத்துமறைந்தும் மறையாது
எங்கள் எல்லோர் மனசிலும்
நீடூழி வாழும் தாயே நெஞ்சடைக்கும்
நினைவுகளை மனதில் சுமந்து கொண்டே
எங்கள் கண்ணீர்ப் பூக்களைச் செலுத்தி
அஞ்சலி செலுத்துகின்றோம்...