Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 30 SEP 1967
இறப்பு 27 MAR 2018
அமரர் பாஸ்கரன் சயாஜினி (ராஜி)
வயது 50
அமரர் பாஸ்கரன் சயாஜினி 1967 - 2018 சண்டிலிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சண்டிலிப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bondy ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பாஸ்கரன் சயாஜினி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.  

ஆண்டு பல கடந்தாலும் உன்
 அன்பினால் வாழ்கின்றோம்
 உறவு பல இருந்தாலும்
 உன் உண்மையால் வாழ்கின்றோம்

எதிர்பார்க்கவில்லை உன் பிரிவை
வாழ்கின்றோம் உன் அரவணைப்பில்
 தவிக்கின்றோம் உன் பிரிவால்
வாழ்கின்றோம் உன் நிழலாய்

கனவில் நீ வரும்பொழுது
 தேடுகின்றோம் நீ வருவாய்யென்று
அது கனவென்று தெரிந்ததும்
கதறுகின்றோம் தனிமையாய்

கடைசிவரை இருப்பாய் என்று
மறந்து விட்டோம் வாழ்வை அன்று
கடந்து விட்டாய் எங்களை விட்டு
எங்கள் கனவை உடைத்துவிட்டாய் மரணத்தால்

பார்ப்பவர்களுக்கு பைத்தியமாக தெரிகின்றோம்
 கேட்பவர்களுக்கு பதில் இன்றி வாழ்கின்றோம்
பாதியிலே நீ சென்றதால் நாங்கள்
பார்வை அற்ற மனிதனானோம்

தேடி வந்து அன்பு செய்தாய்
 நாடி வந்து ஏற்றுக்கொண்டாய்
நடுவழியில் விட்டு விட்டு ஒரு
 கனவுபோல் மறைந்து விட்டாய்

உன் அன்பை நினைக்கையிலே
 உணவும் சேறானது
எதை நினைத்து வாழ்ந்திட நாங்கள்
 வருவாயா தினமும் நீ

எப்போது நீ வருவாய் என்று
காத்திருக்கின்றோம் உன் நிழலாய்.

தகவல்: குடும்பத்தினர்- பாஸ்கரன், ஜெனுஷா

Summary

Photos

No Photos