பிறப்பு 17 FEB 1949
இறப்பு 24 SEP 2019
அமரர் பாலசுப்ரமணியம் சிவபாக்கியம் (தையல்கார பாக்கியம்)
வயது 70
அமரர் பாலசுப்ரமணியம் சிவபாக்கியம் 1949 - 2019 புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

விதுரன், ஷிமாறி, சேரன் (UK, Swiss) 30 SEP 2019 Switzerland

இத்தனை வருடங்கள் வாழ்ந்த இன்னுயிர் அம்மா, அம்மம்மாவை கண்ணின் மணியாக கருத்தோடு பார்த்தும் காலனவன் அழைத்து சென்றுவிட்டான். உலகமென்ற காட்டுப் பாதையில் உறவு நழுவலை ஏற்றுக்கொள்வது இலகுவானது அல்ல; மறைதல் எல்லோருக்கும் நியதியே என்றாலும் மனமதை ஏற்க காலங்கள் வேண்டும். பூவுலகில் உறவுகளை பற்றியவர் தெய்வத்தை இறுகப்பற்றி ஓய்வடை சென்றுவிட்டார். அம்மாவில் (அம்மம்மாவில்) அளவற்ற அன்பை கொண்ட உங்களால் இவ் இழப்பை ஜீரணிக்க முடியாது; இருந்தாலும் எல்லாம் விதி வசமே என மனதை தேற்றுதல் காலத்தின் கட்டாயமே. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம் ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!! துயரில் பங்குகொள்ளும் விதுரன், ஷிமாறி, சேரன் (UK, Swiss) & எங்கள் முதியோர்கள், சிறுவர்கள் சார்பிலும்