1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 17 FEB 1949
இறப்பு 24 SEP 2019
அமரர் பாலசுப்ரமணியம் சிவபாக்கியம் (தையல்கார பாக்கியம்)
வயது 70
அமரர் பாலசுப்ரமணியம் சிவபாக்கியம் 1949 - 2019 புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த பாலசுப்ரமணியம் சிவபாக்கியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

குலதெய்வத்தின் ஓராண்டு நினைவு.....

என் அன்பான துணைவியே!
குன்றாத குலவிளக்கே!
குறைவில்லா நாயகியே!
ஏன் தானோ எம்மை விட்டு நெடுந்தூரம் ஏகினீர்.
காலமெல்லாம் தனித்திருந்து நான்
கண்ணீர் சொரியத்தானா!!!!!

நாமிருவர் தவம் இருந்து பெற்றெடுத்த செல்வங்கள்
உன் பிரிவால் நிலை குலைந்து நிற்குதம்மா,
எப்படி நான் ஆற்றிடுவேன்.
பொல்லாத காலனவன்
யாருக்கும் இரங்கவே மாட்டானா!
உன்னையும் பறிகொடுத்து
பிள்ளைகளுக்கும் ஆறுதல் சொல்ல முடியாமல்
கலங்கித் தவிக்கின்றேன் நான்.

இனி காலமெல்லாம் உன்னை எண்ணிகலங்கி
நீரில் இட்ட உப்பாக கரைந்தே அளிகின்றேன்,
உறவுசொல்ல யார்யார் இருந்தாலும்
நான் தனிமையாகிவிட்டேன்.
என் வாழ்க்கை இப்போ பாலைவனமாச்சே!!!
அம்மா உன் ஆத்மா நித்திய இளைப்பாற
அந்த ஐயப்பனிடம் வேண்டுகிறேன்.....

கண்ணின் மணியாய் எம்மை பொத்திவைதாயே!
அன்புமொழி பேசி நித்தம் அணைத்தெம்மை வளர்த்தாயே அம்மா!
எங்கள் அம்மா அருகிருந்து
உன்பணி செய்யத் துடிக்கின்றோம்,
அம்மா உன் குரல் கேளாது நாம் துடியாய்த் துடிக்கின்றோம்,
அம்மா எப்போதம்மா உங்கள் திருமுகம் மறுபடி காண்போம் நாம்.

அம்மா உங்கள் ஜீவன் பிரிகையிலே என்ன தான் நினைத்தாயோ!
யாரை நினைத்தாயோ!
இப்போது இருக்கும் இடம் அறியாது
காற்றாய் பறந்தீர்கள் ஏன் அம்மா,
இந்த பொல்லாத விதிவந்து
எம்மை கொள்ளாமல் கொண்டது,
உங்கள் அன்பை உணர்ந்து தினம்
இதயம் நெகிழ்கின்றோம்.
உங்களை இழந்து துடிதுடிக்கும்
எம் நிலை பாராயோ அம்மா!!!

தொலைதூரம் இருந்தாலும்
தொலைபேசி தினம் பேசி
ஆசையாக கதைபேசி ஆனந்தமாக சிரிப்பாயே,
இப்போது தொலைபேசி சினுங்கும் நேரம் எல்லாம் அம்மா உன் ஞாபகமே கண்களில் திரைகட்டும்.
நேரிலே எமைக்கண்டால் உங்கள் முகத்தில்
மத்தாப்பு பூத்துவிடும்,
அம்மா எமக்கு இப்போ ஆறமடியுமில்லை,
ஆற இடமும்மில்லை ஆறியழ மடியுமில்லை,
எங்களுக்கு ஆறுதல் தாரும் அம்மா.

வந்தவர் எல்லாம் போவது உண்மை
எம் சிந்தைக்கு இது தெரிந்த உண்மை
ஆனாலும் உங்கள் பிரிவுதனை
ஏற்க மனம் மறுக்குதம்மா
எங்கள் உள்ளக் கோயிலிலே
வாழும் எங்கள் அன்னையே!!!!
மலர் தூவி தினம் பூசிப்போம்
தாத்தா, அம்மம்மாவுடன்
நின்மதியாய் நீ உறங்க,
நீங்கள் தொழுதிட்ட மடத்துவளி முருகன்
துணையிருப்பான் அம்மா.
என்றும் உங்கள் நினைவுடன் வாடும்,,,
கணவன், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளை...

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்