யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வதிவிடமாகவும் கொண்ட பாலசுப்ரமணியம் சிவபாக்கியம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
எங்கள் குடும்பத்தின் குலவிளக்காய்
திகழ்ந்த எங்கள் அன்புத் தெய்வமே!
எங்கள் பாசத்தின் பிறப்பிடமே
அன்பையும் அரவணைப்பையும் தந்தவரே!
எங்களைத் தவிக்க விட்டு
அமைதியாய் சென்றீர்களே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு, இல்லம் நாடி ஓடோடி வந்து கண்ணீர் சிந்தியவாறு எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும் ஆறுதலும், தேறுதலும் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர் நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும், மற்றும் இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இத்தனை வருடங்கள் வாழ்ந்த இன்னுயிர் அம்மா, அம்மம்மாவை கண்ணின் மணியாக கருத்தோடு பார்த்தும் காலனவன் அழைத்து சென்றுவிட்டான். உலகமென்ற காட்டுப் பாதையில் உறவு நழுவலை ஏற்றுக்கொள்வது இலகுவானது அல்ல; மறைதல்...