4ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
2
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மன்னார் உயிர்த்தராசன் குளத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருநெல்வேலியை வதிவிடமாகவும் கொண்டிருந்த பாலசிங்கம் சந்தாம்பிள்ளை அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு நான்கு கடந்தாலும்
ஆறிடுமோ உங்கள் நினைவலைகள்!
நேற்றுப் போல் எல்லாம் எம்
நெஞ்சோடு நினைவிருக்க
காற்றுப் போல் கண்களுக்கு
தோன்றாமல் நிற்கின்றீர்
தோற்றுப் போனது எம்
எதிர்பார்ப்பு எல்லாம் தான்
எம்மோடு இயந்திரமாய் இயங்கிய
இனிய ஜீவன் அவர் இன்று எம்மோடு இல்லை
ஆயிரமாயிரம் வினாக்கள்
விடைசொல்ல ஒரு நிமிடம் வாரீரோ...?
விளையாட்டாகினும் கூட
சில மணித்துளிகள்
விழி அசைக்க மாட்டீரோ...?
காலங்கள் பல சென்றாலும்
கடைசி வரை உங்கள் நினைவு
எம் நெஞ்சை விட்டு அகலாது!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்