1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
2
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மன்னார் உயிர்த்தராசன் குளத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருநெல்வேலியை வதிவிடமாகவும் கொண்டிருந்த பாலசிங்கம் சந்தாம்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஓன்று ஆனதுவோ
ஐயா நீங்கள் மறைந்து
ஆறுமோ வெந்துயர்
அன்பு அப்பாவே!
எங்களை விட்டுப் பிரிந்ததேன்
பசுமையான எம் வாழ்வு
பரிதவித்துப் போனதுவோ!
வானில் சிந்திடும் துளியில்
மண்ணில் பயிர்கள் துளிர்விடும்
எங்கள் விழிகள் சிந்திடும்
துளியின் வழியில் உங்களை
கண்டிட முடியாதோ....
எத்தனை ஆண்டுகள் சென்றாலும் எம்
நெஞ்சை விட்டு அகலாது உங்கள் நினைவுகள்
இதயதுடிப்பு உள்ளவரை எங்கள்
இதய தீபம் நீங்கள் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்