3ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மன்னார் உயிர்த்தராசன் குளத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருநெல்வேலியை வதிவிடமாகவும் கொண்டிருந்த பாலசிங்கம் சந்தாம்பிள்ளை அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் உறைவிடமாகவும்
பாசத்தின் சிகரமாகவும் வாழ்ந்த
எம் அன்புத் தெய்வமே
பக்குவமாய் எமை வளர்த்து காத்து
கல்வி அறிவு தனை ஏற்றமுடன் அளித்து
வையத்துள் வளமாய் வாழ்ந்திட வைத்தீர்கள்.
நீங்கள் பண்புடனே வாழ
பக்குவமாய் சொன்ன வார்த்தைகள்
என்றும் எம் மனங்களில் வாழுதையா!!!
வானுலகம் சென்றாலும் எம்
வழித்துணையாவும் என்றும்
இருந்துவிடுவீர்கள் ஐயா!!!
நீங்கள் மறைந்து மூன்று ஆண்டுகள் ஆனாலும்
இன்றும் என்றும் எம் நெஞ்சத்தில்
உங்கள் நினைவுகள் நிலைத்திருக்குமையா!!!!
தகவல்:
குடும்பத்தினர்