8ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பகீரதன் கணேசு
Executive Director- N. Vaitilingam Group
வயது 41
Tribute
14
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், இணுவிலை பூர்வீகமாகவும், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பகீரதன் கணேசு அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
எழுதிட வார்த்தை இல்லை
அழுதழுது ஓய்ந்தன கண்கள்!
ஆண்டுகள் எட்டு ஆனதடா
ஆறவில்லை எங்கள் மனம்
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
உன் போல் ஆகிடுமா!
வாழ்ந்த கதை முடியுமுன்
சென்றிடவா நீ பிறந்தாய்
உன் வாழ்வு தொடங்கும் முன்
நீ எங்கே சென்றாய் தனியா!
எத்தனை கனவுகள் கண்டிருப்போம்
அத்தனையும் புதைத்து போனதய்யா
உந்தன் அழகான
புன்னகை முகத்தை தொலைத்து விட்டு
அமைதியற்று வாழ்கிறோம்!
காலங்கள் எத்தனை கடந்து போனாலும்
உன் பிரிவிலிருந்து மீண்டு வருவதற்கு
இந்த ஜென்மமல்ல எந்த ஜென்மமும்
போதாதய்யா !!
தகவல்:
குடும்பத்தினர்
காலம் வேகம் கொண்டாலும் , துயருறும் நெஞ்சங்களாக நானும் ! ஆறுதல் கொண்ட ஆத்மாவிற்கு இறை நன்றி 👏 T Siam