3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பகீரதன் கணேசு
Executive Director- N. Vaitilingam Group
வயது 41
Tribute
12
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், இணுவிலை பூர்வீகமாகவும், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பகீரதன் கணேசு அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி 02-08-2021
எங்களை விட்டு நீ பிரிந்து
மூன்று ஆண்டு சென்றது
மறைந்த உன் நினைவு மட்டும்
நெஞ்சில் மாறாமல் உள்ளது மகனே
ஆண்டவன் அழைத்திட்ட பின்னாலே
அழுகிறது இதயம் வெறுமையாகவே
கலைந்து செல்லும் மேகமென
காலங்கள் கடந்து போகின்றனவே
ஆனாலும் உன் நினைவுகள்
புயலென எரிமலையென
கடலலையென எம் மனங்களில்
பொங்கிப்பிரவாகித்துக் கொண்டே இருக்கும் மகனே
வாழ்ந்த கதை முடியுமுன்னே- நீ
வாழாமல் மாய்ந்ததேனடா?
நூறாண்டு போனாலும் உன்
நிலவு முகம் தேயாதடா!
உன் நினைவுகள் தரும் கண்ணீர்
இவ்வுலகில் நாம் வாழும் வரை
வற்றிப் போகாது.
உன் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம் !!
தகவல்:
குடும்பத்தினர்
We share your sorrow in your great loss.