💐கண்ணீர் அஞ்சலி💐 😭😭😭😭😭😭😭😭 கடவுளும் காலனும் ஓருபடகில் பயணித்தால் யாரிடம் சென்று நாம் நியாயம் கேட்க ? மகனே அனுசன்!!! கடவுளாய் நீயிருந்து ஓர் உயிர் காத்திடவே, காலனவன் உன்னுயிர் பறித்திடவே கடவுளும் அங்கு குருடானான்... ஐயகோ இக் கொடுமை யாருக்கும் வரவேண்டாம். மகனே அனுசன்! ஆவி துறந்து நீ உயிரற்ற உடலானாய், உனைப் பிரிந்து உயிரோடு எம் உடல் ஆவியிழந்து துடிக்கிறது . மணமேடையிலே நீயிருந்து அறுகரிசி போடுமுன்னே, பாடையிலே உன்னைக் கிடத்தி வாய்க்கரிசி போடவைத்த காலனும் கடவுளும் களவுக் கூட்டாளிகள் . மகனே! உனையிழந்து தவிக்கும் தந்தைக்கும்,தாய்க்கும், தங்கைக்கும் ஆறுதல் கூற ஓராயிரம் வார்த்தையுண்டு ஆனால்... நீயே தான் வரவேண்டும்......... இனி உன் குரலைக் கேட்பதெப்போ? பந்துதைக்கும் உன் கால்த்தடம் பதிப்பதெப்போ? உன் கண்சிமிட்டும் சிரிப்பழகை பார்ப்பதெப்போ? கண்கெட்ட காலனவன் செய்த கொடுமையிங்கு புலம்பி நாமும் தவிக்கின்றோம். யாருக்கு யாரிங்கு ஆறுதல் கூறுவது. மகனே இனி எவ்விடம் போய்த் தான் உன்னை நாம் தேட? .நீ சென்ற திசை தெரியவில்லை அதைக் கேட்கவும் ஒரு நாதியில்லை. விழியிழந்தவன் கரத்தில் கோலுண்டு வழி காட்ட , விழியிருந்தும் வழி தெரியவில்லை உனைத் தேட ... மகனே அனுசன் உன் நிழல் மட்டுமே எமைப் பிரிகிறது உன் நினைவுகள் அல்ல அது எம் நிழலோடு கூடவே தொடரும் .......... மரணம் என்பது மானிடர் வாழ்வில் என்றும் மாறாமையெனின் மகனே அனுசன்! அமைதியாய் துயிலுறங்கு. எம் கண்ணீரீப் பூக்களைக் காணிக்கையாக்கி ..உன் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம். 🙏ஓம் சாந்தி 🙏ஓம் சாந்தி🙏 ஓம் சாந்தி .மகனே அனுசன் உன் பிரிவால் துயருறும் உன் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், அம்சர்டாம் தமிழ்ப்பள்ளி யினருக்கும் மற்றும் அனைத்து உறவுகளுக்கும் எமது பிறேடா தமிழ் பாடசாலை சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். 🙏ஓம் சாந்தி 🙏 ஓம் சாந்தி 🙏ஓம் சாந்தி