
திதி : 22-05-2025
நெதர்லாந்து Amsterdam Holland ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த அனுஷன் அகிலன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
நேற்று நீ இருந்தாய்
உன்னோடு நாமிருந்தோம்
காற்றொன்று வீசியதாய்
நினைவிருக்கிறது
நீ கலைந்துபோன கணம் மட்டும்
நினைவில் இல்லையப்பா..!
உயிர் உருக்கும் அந்த கணப்பொழுதை
நினைக்க மனம் மறுக்குதப்பா
ஏரியில் வீழ்ந்த நண்பனுக்கு
உதவியாய் கைகொடுக்க சென்றாயே
உம்மோடு சேர்ந்து அவனை கரை சேர்த்த
உம் நண்பர்கள் உன்னை கரை சேர்க்க மறந்தனரோ
உலகமும் நிஜமில்லை,
உன் நண்பர்களும் நிஜமில்லை
பிரிவுகளால் வலிகள் தந்தவனே
வசந்தத்தை தொலைத்து தூரமானாயோ
புன்னகை உன் காணாது தவிக்கின்றோம்
உன் மொழி கேளாது அழுகின்றோம்
ஆண்டுகள் இரண்டு ஆனாலும்
காலமெல்லாம் வரைந்து வைத்த ஓவியமாய்
எம்முடனே வாழ்ந்திடுவாய் மகனே!
மீண்டு வருவாய் என வழி பார்த்திருந்தோம்
விண்மீன்களாய் தான் தெரிகின்றாய்
எம் வாழ்வின் உதயமே நாம்
தேடி எடுத்த பொக்கிஷமே
காலன் கண் வைத்தானோ
உனை அழைத்துச் சென்றானோ!!!
என் உடன் பிறப்பே நீ எம்மை விட்டு பிரிந்ததை
நினைக்கையில் விழியோரம் கசியும்
கண்ணீர் துளிகள் உறவுகளை
மட்டுமல்ல உள்ளத்தையும்
ஒரு நொடி மௌனமாக்குகிறது
மீளவும் பெற முடியுமா நீ
எம்மோடு கூடிக்குலாவிய நாட்கள்
இரண்டென்ன பல தசாப்தங்கள்
கடந்து சென்றாலும் எம் நெஞ்சை
விட்டகலாது உம் நினைவுகள்
இன்று குலவிளக்கு அணைந்ததென்று
ஊற்றெடுக்கும் விழிநீரால் - எம்
உதிரங்களே கண்ணீரால் வெதும்புதண்ணா..
நிழல் போன்று எங்கும் தொடர்ந்தாய்
நினைவை தந்து ஏன் சென்றாய்..?
கனவாய் தொலைந்தது ஆண்டு இரண்டு
கரையுது இன்னும் விழியிரண்டு
உன்னோடான நினைவுகள் சுமையாய்
கணக்கின்றன மனதினிலே...
வலியோடு தவிக்கின்றோம் - புவிமீதில்
உன் பிரிவினால்
வாடும் குடும்பத்தினர்..!!!