Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 03 OCT 2001
ஆண்டவன் அடியில் 12 JUN 2023
அமரர் அனுஷன் அகிலன்
Business Analyst At Air France- KLM, Student Business IT and Management, Hogeschool in Holland
வயது 21
அமரர் அனுஷன் அகிலன் 2001 - 2023 Holland, Netherlands Netherlands
Tribute 59 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

நெதர்லாந்து Amsterdam Holland ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த அனுஷன் அகிலன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 01-06-2024

நீங்காத நினைவுகள் தந்து
நீண்ட தூரம் சென்று ஆண்டுகள்
கடந்தாலும் ஓயவில்லை
உங்களின் நினைவுகள்
அகலவில்லை என் அன்பு மகனின் முகம்!

உலகமும் நிஜமில்லை,
உனக்கு கரம் கொடுக்காத
உன் நண்பர்களும் நிஜமில்லை

என்றுணர்ந்தோம் உந்தன் இழப்பால்..

ஏரியில் வீழ்ந்த நண்பனுக்கு
கைகொடுத்தாய் அவன் கரைசேர
கரைக்கு அவனோ வந்துவிட்டான்
ஏரியில் நீயோ உயிர் துறந்தாய்
கமலியின் மகனாய் வந்து உதித்தாய்
கங்கையின் மகனாய் சென்று விட்டாய்...

உன்னை காணமுடியாமல் காலத்தின் கொடுமை
கங்கைமடியில் சங்கமித்தாய் என்ன விந்தையடா
உன் தாய், தந்தை, சகோதரி, உற்றார், உறவினர், நண்பர்கள்
எல்லோரையும் தவிக்க விட்டு
சென்று விட்டாய் அன்பு மகனே...

காலன் அவன் கடலுக்கு அழைத்துச் சென்று
உன் உயிர்த் துறந்து இன்னும் ஒரு உயிர்
காப்பாற்றிய தியாகி ஆவாய் அன்பு மகனே ...

இறைவனும் இரக்கமற்றவன்
என்றுணர்ந்தோம்
எங்கள் அன்பு மகனின் இறப்பால்!

என்ன செய்வது எம் மனம் ஏங்குகிறது!
அழுத விழிகளுக்கு ஆறுதல் காட்ட
ஒரு முறையாவது வா என் அன்பு மகனே
உன் பாசமான முகம் காண!

உடன்பிறப்பே என் உயிர்ச் சகோதரனே!
என்னுடன் பிறந்தவனே
என்னருமைச் சகோதரனே !
உன்னைத் தேடி என்
கண்கள் களைத்ததடா...
அமைதியின் அடைக்கலமாய்...
அன்பின் பிறப்பிடமாய்...
பாசத்தின் ஜோதியாய்...
நேசத்தின் ஒளியாய்...
திகழ்ந்த எம் சகோதரனே...!

உடல்கள் உயிரை பிரிந்தாலும்
உணர்வுடன் ஒன்றாகிப்போன என் உடன்பிறப்பே

உன் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos